Sunday, 15 September 2019

தபூ சங்கர் கவிதைகள்


1.எனக்கு பெண்
கிடைப்பது
முக்கியம் இல்லை.
என் காதலுக்கொரு
காதலி
கிடைக்க வேண்டும்

*****************

2.காதலை
எப்போது சந்தித்தேனோ,
அப்போது தொடங்கியது
என் வாழ்வு.
எனினும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது,
சந்தித்து விடவேண்டும்
என் காதலியை...!


*****************

3.என்னிடம்
கொட்டிக்கிடக்கும்
காதலை
எதைக் கொண்டும்
வாங்கி விட முடியாது,
காதலை தவிர...!

*****************

4.மருத்துவம்
படிக்காமல் போனதற்காக
ரொம்ப வருந்துகிறேன்.
படித்திருந்தால்
உன் இதயத்தில்
ஒபன் ஹார்ட் சர்ஜரி
செய்தாவது நுழைந்திருக்கலாம்.

*****************

5.உன்னை கேலி செய்பவனை எல்லாம்
முறைத்து பார்க்கிறாய்.
உன்னை நேசிக்கிற
என்னை மட்டும்
சாதாரணமாக கூட
பார்க்க மறுக்கிறாயே?

*****************

6.அஞ்சல் வழிக்கல்வியை
முதன்முதலில்
தொடங்கியது
டெல்லி பல்கலைகழகம்.
கொஞ்சல்வழிக் கல்வியை
முதன்முதலில்
தொடங்கியவள் நீ..!


*****************

7.சராசரியாய்
ஒரு நிமிடத்தில்
38 புயல்கள் தோன்றுகின்றன
இந்த பூமியில்.
இதில் எத்தனை புயல்கள்,
நீ சிரிப்பதால்
தோன்றிகிறதோ...!

*****************

8.இந்தியாவின் ரோஜா தலைநகரம்
பூனா.
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்.


*****************

9.ஒரு யுகம் என்பது,
43,20,000 ஆண்டுகள்.
உன்னுடன் வாழும்
ஒரு தேவ கணத்துக்கு
இணையாகுமா
அந்த ஒரு யுகம்?


*****************

10.தும்மல் வரும்போது
நம் உடலில்
இதயம் உட்பட அனைத்தும்
ஒரு நொடி நின்றுவிடும்.
நீ வரும்போது
தும்மலே நின்றுவிடும்

*****************

11.மனித உடலில்
உதடுகள் மட்டும்
வியர்ப்பதில்லை.
ஆனால்
உன் உதடுகள்தான்
என்னை அதிகம்
வியர்க்க வைக்கின்றன
.


*****************

12.உன் ஞாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை,
உன் ஞாபகத்தைத் தவிர...!


*****************

13.நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள்
அழகாக்குகின்றன,
நீ இல்லாத
வாழ்க்கையை
உன் ஞாபகங்கள்
அழகாக்குகின்றன.


*****************

14.உன்னைப் பிரிந்தும்
நான் உயிரோடு இருக்கிறேன்,
உன் ஞாபகத்தின் கருணையால்...!

*****************

15.என் விரலைப் பிடித்து
அ எழுதக் கற்றுத் தந்தது
அம்மா....,
என்னையே
விரலாய்ப் பிடித்து
காதல் எழுதக்
கற்றுத் தந்தது
நீ...!


*****************
16.உன் ஞாபகத்துக்குத்
தெரியவே தெரியாது,
என்னுடன் நீ
இல்லை என்பது...!

*****************

17.உன் ஞாபகத்தில்
நான் தொடங்கும்
நடைபயிற்சி,
நடைபயணமாய்
நீண்டுவிடுகிறது...!


*****************

18.இந்தப் பிறவி
மட்டுமல்லாமல்
அடுத்தப் பிறவியிலும்
உன் ஞாபகம் வேண்டும்
எனக்கு...!


*****************

19.காலம் போய்க் கொண்டே
இருந்தால்
எனக்கென்ன...?
உன் ஞாபகம்தான்
வந்து கொண்டே இருக்கிறதே...!

*****************

20.எங்கே யார்
உன்னை மறந்தாலும்
இங்கே
அழுகை வரவேண்டும்
எனக்கு...!

*****************

21.இத்தனையும்
என் ஞாபகத்தின்
 க்தி இல்லை,
உன் ஞாபகத்தின் சக்தி...!


*****************

22.எனக்குப் பிறகு
உன்னையே
நினைத்துக்
கொண்டிருப்பதற்காக
நான் செய்த
குட்டி இதயங்கள்தாம்
என்
கவிதைகள்...!


*****************

23.காற்றே
அவசரமொன்றுமில்லை,
அவள்
சுவாசக் குழலை
சேதப்படுத்திவிடாமல்
சென்று வா.
அப்படியே அவள்
இதயத்தில்
எங்காவது,
நான் இருக்கிறேனா
என்பதையும்
பார்த்துவிட்டு வா...!


*****************

24.
இந்த மலையைக் குடைந்து
இரயில்பாதை
அமைத்தவனுக்காவது
தெரியுமா?
உன்
கல்மனசுக்குள்
நுழைவது
எப்படி என்பது...?

*****************

25.என்னை நல்லவன் என்று
நினைத்துக்
கொண்டிருந்தேன்..
அந்த நினைப்பில்
மண் அள்ளிப்
போட்டுவிடும்
போலிருக்கிறது,
உன் மீதான காதல்...
உன் வீட்டு முன்
காய்ந்துகொண்டிருக்கும்
உனது
ஆடையைத்
திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே
மனசு.....!

*****************

26.திடீரென்று
என்னிடம்
 நீ
கோபித்துக்கொண்டதற்குக்
காரணம் தெரியாமல்
யோசித்துக்
கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து
"நான்தான் கோபத்தில் இருக்கேன்ல்ல.?
வந்து சமாதானப்படுத்தினா
என்னவாம்?"
என்று நீ
சிணுங்கியபோதுதான்
புரிந்தது
உன் கோபத்திற்கான
காரணம்...!

*****************

27.நீயோ
சூரிய வெளிச்சம்
முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால்
முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்,
சூரியனோ
உன்னைப்
பார்க்கமுடியாத
கோபத்தில்
எல்லோரையும்
சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறது....!


*****************

28.
ஓயாமல்
உன்னையே
நினைக்கிறேன்,
என் ஓய்விலும்
உன்னையே
நினைக்கிறேன்...!


*****************

29.நாலு வரிகளை
மட்டுமே
கொண்டதது
ஜப்பானின்
தேசிய கீதம்.
ஒரே ஒரு
வார்த்தையை
கொண்டது
என் காதல் கீதம்.
அது
உன் பெயர் தான்...!


*****************

30.ஐந்து கண்களை
கொண்டது
வெட்டுக்கிளி.
இரண்டு
கண்களைக் கொண்டு
என்னை
வெட்டும்
கிளி நீ...!

*****************
31.சிங்கத்தை
உதைத்தே
கொன்றுவிடும்
சக்தி கொண்டது
ஒட்டகம்.
என்னை பார்த்தே
கொன்றுவிடும்
சக்தி கொண்டவள்
நீ....!





****************

32.பகலைவிட
இரவில்
மேகங்கள் மெதுவாக
நகர்கின்றன.
நீ தூங்கும்போது
பூமியே
மெதுவாக
சுற்றும்போது
மேகம் மட்டும்
என்ன செய்யும்
பாவம்,.,!
****************
33.இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளை
பார்த்திருக்கிறது.
ஆனால்
உன்னைப் போல
ஒரு
சர்வ அழகுகாரியை
இப்போதுதான்
பார்க்கிறது.

****************

34.உனக்கு
சமைக்கத் தெரியுமா?
துவைக்க தெரியுமா?
என்பது பற்றியெல்லாம்
எனக்கு கவலையில்லை.
உனக்கு
காதலிக்கத் தெரியுமா....?
****************
35.கும்பலில்
எல்லாம்
நீ போகாதே...
யார்யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை...
****************
36.நேரம் போவதே
தெரியாமல்
உன்னோடு
பேசிக்கொண்டிருக்கையில்
ஒரேயொரு
கவலைதான் எனக்கு.
இந்த நேரம்
ஏன் போகிறதென்று.
****************
37.இந்த வீட்டில்
எந்த வேலையும்
உனக்கு இல்லை.
என்னை காதலிப்பதைத் தவிர....!
****************
38.துடிப்பதைவிட
உன்னை
நினைப்பதற்க்கே
நேரம்
சரியாக இருக்கிறது,
என் இதயத்திற்கு.
****************
39.கோயிலுக்கு
நேர்ந்துவிடும்
மாட்டைப் போல
உன்னை காதலிப்பதற்கென்றே,
நேர்ந்துவிட்டு விட்டேன்,
என்னை நானே,
****************
40.முனிவர்கள்
கடவுளை
பார்ப்பதற்க்காக
தவமிருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையே
பார்த்துவிட்டு
தவமிருக்கிறேன்.
****************
41.
வளர்ந்து கொண்டே இருக்கும்
உன் நினைவுகளை
வளரவே வளராத
என் இதயத்தில்
எப்படி
அடுக்கி வைப்பேன்.
****************
42.
இந்த உலகில்
எத்தனையோ
உலக அழகிகள்
இருக்கிறார்கள்.
ஆனால் நீயோ
ஒர் அழகான
உலகமாகவே
இருக்கிறாய் எனக்கு...!
****************
43.
உன்னிடம்
என் இதயத்தை
தொலைத்துவிட்டதாக
எப்போதும்
புலம்பியதில்லை
நான்.
எனக்குள் இருந்த
இதயத்தை
கண்டுபிடித்து
கொடுத்தவளே
நீ தான்....!
****************
44.நீ ஆசையாக
வளர்க்கும்
உன் வீட்டு
நாய்க்குட்டி கூட
எப்போதாவது
உன்னை பார்த்து
குரைக்கலாம்.
ஆனால்
எப்போதும்
உனக்காக
துடிக்க மட்டுமே
செய்யும்
என் இதயம்...!
****************
45.
இந்தா என் இதயம்.
விளையாடும்வரை
விளையாடிவிட்டு
தூக்கிப் போட்டுவிடு.
அது அதற்குதான்
படைக்கப்பட்டது

No comments:

Post a Comment

Nazriya pencil drawing